பதிவு செய்த நாள்
18
ஜூலை
2017
01:07
கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவிலில், ஆடி மாதப் பிறப்பு முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன. கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி மகா மாரியம்மன் கோவிலில், நேற்று ஆடி மாதப் பிறப்பு முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஐம்பொன் நகைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், லாலாப்பேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், ஆடி, 19ல் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தேங்காய் உடைக்கும் பக்தர்கள் ஆடி, 1 முதல், 19 வரை, கையில் காப்புக் கயிறு கட்டி, விரதம் இருப்பர். விழா நாளில், தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டு, நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்வர். அதன்படி மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், நேற்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து, தங்களது கையில் காப்புக் கயிறு கட்டி விரதம் இருக்க துவங்கினர்.