ஒரு வீட்டின் பூஜையறையில் வலம்புரிச் சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் அங்கு குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும். வலம்புரிச் சங்கின் தீர்த்தத்தில் துளசி இட்டு பூஜை செய்து அந்த நீரைக் குளிக்கும் நீருடன் சேர்த்து மங்கள ஸ்நானம் செய்தால் பிரம்மகத்தி தோஷம் போய்விடும்.
என்று விளக்குகின்றது. சுவாமிக்கு வலம்புரிச் சங்கில் நீர் எடுத்து அபிஷேகம் செய்தாலும் நமக்கு நன்மை தான். கார்த்திகைச் சோமவாரத்தில் 108 சங்கபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச் சங்கு உருவில் குபேரன் இருப்பார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளிக்கிழமை தெளித்து வர, தோஷம் விலகி நலம் உண்டாகும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச் சங்கில் பால் ஊற்றி அங்காரக பூஜை செய்தால் தோஷம் விலகி விரைவில் திருமணம் நடக்கும்.
கடன் தொல்லையால் தவிப்பவர்கள் பவுர்ணமி தோறும் சங்குக்கு, குங்கும அர்ச்சனை செய்து வர, கடன் பிரச்சனை தீரும். 16 வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும். சுத்தமான உண்மையான வலம்புரிச் சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஒரு தெய்வத்துக்கு சங்கால அபிஷேகம் செய்வதால் பத்து பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறார்கள் என்கிறது சாஸ்திரம்.
பிறந்த குழந்தைக்கு ஜூரம் வந்தால் சங்கில் நீர் விட்டு உத்ராட்சம் இட்டு, சிறிது நேரம் ஊறியதும், நீரை மட்டும் ஊட்டி விட ஜூரம், தோஷங்கள் அனைத்தும் விலகும். பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ போட்டு பொட்டிட்டு வணங்கி வந்தால் உணவுக்குப் பஞ்சம் வராது.