உடுமலை: உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில் ஆடிகிருத்திகையையொட்டி, சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆடி கிருத்திருத்திகையையொட்டி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமிக்கு காலை, 8:00 மணி முதல் சிறப்பு அபிேஷகம் நடந்தது. பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். மாலை , 5:00 மணிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து, 7:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.