பதிவு செய்த நாள்
20
ஜூலை
2017
11:07
உத்திரமேரூர்: உத்திரமேருர் பச்சையம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர், தாமரைக் குளக்கரையில் பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் பாலாபிஷேகம் மற்றும் தீமிதி விழா நடப்பது வழக்கம். அதன் படி, இந்தாண்டிற்கான விழா, நேற்று முன்தினம் நடந்தது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, காப்பு கட்டிய பக்தர்கள், அப்பகுதி முத்து பிள்ளையார் கோவிலிலிருந்து பால்குடங்களுடன் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மதியம், 2:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் பொங்கலிட்டும், தீ மிதித்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில், சுற்று வட்டார பகுதி வாசிகள் பங்கேற்று வழிபட்டனர்.