கவுமாரியம்மன் கோயிலில் அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2017 12:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இக் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கண் அபிஷேகம் நடந்தது. பத்து நாட்கள் திருவிழாவில் அம்மன் சிம்மம், குதிரை, யானை, பூபல்லாக்கு, அன்னபட்ஷி, ரிஷபவாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அக்னிச்சட்டி: நேற்று அதிகாலை 3:00 மணி முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். டி.எஸ்.பி., வினோஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜூலை 25ல் மறுபூஜையும், பாலாபிஷேகமும் நடக்க உள்ளது.