பதிவு செய்த நாள்
22
நவ
2011
11:11
கடலூர் : கடலூர் பாடலீஸ்வரர் மற்றும் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சங்கு அபிஷேகம் நடந்தது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று காலை சுவாமிக்கு தீபாராதனை, 108 சங்கு அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து பாடலீஸ்வரருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மேனகா, உதவி ஆணையர் ஜெகன்நாதன் மற்றும் கோவில் குருக்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
பண்ருட்டி: காலை 6 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, விநாயகர், சுப்ரமணியர், திருநாவுக்கரசர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. பகல் 11 மணியளவில் அம்பாள் பெரியநாயகி, வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு ஆகமவிதிப்படி சிறப்பு திருமஞ்சனம், பிற்பகல் 3 மணிக்கு 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு வீரட்டானேஸ்வரர் சுவாமி நாகாபரணத்துடன், அம்பாள் பெரியநாயாகி வெள்ளி அங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு உற்சவர் சுவாமிகளுக்கு சோட உபசார சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.