திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உப கோயில்களான அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில், சொக்கநாதர் கோயில், பழனி ஆண்டவர் கோயில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களிலுள்ள உண்டியல்கள் கோயில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷிணி முன்னிலையில் எண்ணப்பட்டன. அதில் 15 லட்சத்து 34 ஆயிரத்து 226 ரூபாய், 188 கிராம் தங்கம், ஒரு கிலோ 710 கிராம் வெள்ளி இருந்தது. செயற்பொறியாளர் சுஜா தெரிவித்துள்ளார்.