பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
01:07
பழநி:ஆடி அமாவாசையை முன்னிட்டு, பழநி மலைக்கோயில், சண்முகநதிக்கரை பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் வழிபட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரியாவுடையார் கோயில் சண்முநதிக்கரையில் வாழைக்காய், பச்சரிசியுடன் படையல் படைத்து முன்னோர்களை நினைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இதைப்போல பாலாறு-பொருந்தலாறு அணை வீர ஆஞ்சநேயர்கோயில், கண்ணாடி பெருமாள்கோயில், பாலசமுத்திரம் அகோபிலபெருமாள்கோயில், கரடிக்கூட்டம் சாந்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பழநியை சுற்றியுள்ள கிராமத்தினர் அம்மன், கருப்பணசுவாமி என அவரவர் குலதெய்வ கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். ஞாயிறுவிடுமுறை தினத்தால் மூன்றுவின்ச்களில் 2 மட்டும் இயங்குவதால் அங்கு, 2 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்று சுவாமிதரிசனம் செய்தனர்.