திருநெல்வேலி கோயில் சுவாமி கிரீடங்கள் மீட்பு:கொள்ளையர் குறித்து விசசாரணை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2017 01:07
திருநெல்வேலி: நெல்லை அருகே கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட உலோக கிரீடங்களை போலீசார் மீட்டுவிசாரித்தனர். திருநெல்வேலி மாவட்டம் மானூரை அடுத்துள்ள எட்டாங்குளம்.அங்குள்ள காட்டுப்பகுதியில் ஒரு பையில் கோயில் சுவாமி, அம்பாள் கிரீடங்கள் கிடப்பதாகமானூர் போலீசாருக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் அவற்றைஎடுத்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள ஏதாவது கோயிலில் கொள்ளையர்கள் ஐம்பொன் போன்ற விலைமதிப்பற்ற சிலைகளை கொள்ளையடிக்க முயற்சித்திருக்கலாம்.ஆனால் கிடைத்தது பித்தளை போன்றவற்றில் உருவான கிரீடங்கள் என்பதால்போட்டுவிட்டு செசன்றிருக்கலாம் என தெரிவித்தனர். இருப்பினும் தற்போது இவை எந்த கோயிலுக்குஉரியவை என்பது குறித்தும், சுற்றுவட்டாரத்தில் சிலைகள் கொள்ளை போயிருக்கிறதா என்பது குறித்தும்விசாரித்துவருகின்றனர்.