தேவகோட்டை, தேவகோட்டை அண்ணாசாலை பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டது. தினமும் அம்மனுக்கு பல அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் பூத்தட்டு, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினார். அன்னைஅபிராமி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது. அம்மனுக்கு சங்காபிே ஷகம் செய்து வழிபட்டனர். நிறைவு நாளன்று இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு அபிராமி அந்தாதி பாடி அர்ச்சனை செய்தனர்.