பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
02:07
ஊத்துக்கோட்டை : அங்காள பரமேஸ்வரி கோவிலில், வரும், 2ம் தேதி, மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை அடுத்த, நாகலாபுரம் மண்டலம், திருப்புராந்தகபுரபாளையம் கிராமத்தில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில். பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவில் பணி நிறைவடைந்து, வரும், 2ம் தேதி, மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.
தேதி நேரம் நிகழ்ச்சிகள்
ஜூலை 31 காலை 8:00 மணி கணபதி பூஜை, ஹோமம், தீர்த்த பிரசாத வினியோகம்
மாலை 3:00 மணி மிருத்யம் கிரஹணம், கங்கை நீர் கொண்டு வருவது
மாலை 5:00 மணி வாஸ்து பூஜை, ஹோமம்
இரவு 8:00 மணி யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம், அக்னிபிரதிஷ்டை
ஆக., 1 காலை 8:00 மணி கலச பூஜை, ஹோமம்
காலை 10:30 மணி கரிக்கோலம், சயநாதிவாசம்
மாலை 5:00 மணி கலசபூஜை, ஹோமம்
இரவு 10:00 மணி விக்ரஹ பிரதிஷ்டை
ஆக., 2 காலை 9:00 மணி மகா பூர்ணாஹூதி
காலை 9:30 மணி மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம், மகா ஆரத்தி.