பதிவு செய்த நாள்
31
ஜூலை
2017
02:07
ஓமலூர்: ஓமலூர் அருகே, காமலாபுரம், சின்னேரி மற்றும் பெரிய ஏரிகள் வறண்டு, அப்பகுதி விவசாயத்துக்கு, தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நேற்று கிராம மக்கள், மழை வேண்டி, வருண பகவானுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். அப்போது, சின்னேரி நடுவே, பெண்கள் கூழ் குடித்துவிட்டு, ஒப்பாரி வைத்து, சுவாமிக்கு சர்க்கரை பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர். இதில், காமலாபுரம், பொட்டியபுரம், மோட்டுப்பட்டி, பள்ளிவீரன்காடு, கிழக்கத்திகாடு, வில்லைகொட்டாய் கிராமங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.