கீழக்கரை:கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்றத்திட்டத்தின் சார்பாக, உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உலக நன்மைக்காக 1008 விளக்கு பூஜை பிரகார வளாகத்தில் நடந்தது. மகளிர் மாநாடு, ஆன்மிக சொற்பொழிவு, குறு நாடகம் நிகழ்த்தப்பட்டது. மாங்கல்ய பூஜை, சக்தி ஸ்தோத்திரம் செய்யப்பட்டது. துாத்துக்குடி விவேகானந்த மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குழுவினர் வருண ஜெப சங்கல்ப பாடல்கள் பாடினர். விவேகானந்த கேந்திர செயலாளர் அய்யப்பன், பேஷ்கார் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாகஜோதி மற்றும் கேந்திர சகோதரிகள் செய்திருந்தனர்.