திருச்செந்தூர் உண்டியல் மூலம் ரூ 1 கோடியே 42 லட்சம் வருமானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2017 03:08
துாத்துக்குடி:திருச்செந்துார் முருகன் கோயிலில் இந்த மாத உண்டியல் வருமானம் ஒரு கோடியே 42 லட்சமாகும்.திருச்செந்துார் முருகன் கோயிலில் மாதந்தோறும் இரண்டு முறை உண்டியல் எண்ணப்படுகிறது. ஜூலை மாதத்தில் 17 ம்தேதி எண்ணப்பட்டபோது 74 லட்சத்து 68 ஆயிரத்து 385 ரூபாய் இருந்தது. நேற்று மாத இறுதியில் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன் தலைமையில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் 68 லட்சத்து 22 ஆயிரத்து 739 ரூபாய் இருந்தது. ஜூலையில் மொத்தத்தில் 885 கிராம் தங்கமும், 15 ஆயிரத்து 400 கிராம் வெள்ளியும், 188 எண்ணிக்கை வெளிநாட்டு கரன்சி நோட்டுக்களும் இருந்தன.