நாகர்கோவில்: மருந்துவாழ்மலையில் உடைக்கப்பட்ட ஆஞ்சசநேயர் சிலைக்கு பதிலாக புதிய சிலை நிறுவப்பட்டு பிரதிஷ்டை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி அருகே பொத்தையடியில் கடல் மட்டத்தில் இருந்து 1900 அடி உயரத்தில் மருந்துவாழ்மலை உள்ளது. இங்கு அரிய வகை இயற்கை மூலிகைகள் உள்ளது. மன்னர் ஆட்சி காலத்தில் இங்கிருந்துதான் அரண்மனைக்கு தேவையான மூலிகைகள் கொண்டு செல்லப்பட்டது. இங்கு இரண்டரை அடி உயர ஆஞ்சநேயர் சிலை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாரோ விஷமிகள் இந்த சிலையை உடைத்து போட்டனர். குற்றவாளிகள் கைது செய்யப் படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து இந்து இயக்கங்கள் போராட்டம் நடத்தவில்லை. இந்நிலையில் நேற்று காலை இங்கு புதிதாக அனுமான் சிலை நிறுவப்பட்டு பிரதிஷ்டை பூஜைகள் நடத்தப்பட்டது.