திண்டுக்கல்: திண்டுக்கல்லில் துாய விண்ணேற்பு அன்னை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்கு தந்தை மரிய இஞ்ஞாசி, பாதிரியார் மெல்கி லாரன்ஸ் தலைமை வகித்தனர். கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. ஆக.15 காலை 10:00 மணிக்கு தேர் பவனி நடக்கிறது.