காளையார் கோயில்: காளையார்கோயில் ஜலகண்ட அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது. ஜூலை 28ம் தேதி கொடி வளைதலுடன் விழா துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம்,தீபாராதனை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் வாரச்சந்தையிலிருந்து மண்குதிரையை ஊர்வலமாக எடுத்து வந்து காளீஸ்வரர் கோயில் முன் இறக்கி வைத்து சிறப்பு அபிேஷகம் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு ஊர்வலமாக சென்று ஜலகண்ட அய்யனார் கோயிலை அடைந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.