Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மயிலை கபாலீஸ்வரருக்கு தங்க ... கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகு கோவில் உண்டியல் எரிந்து காணிக்கை பணம் சேதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2017
02:08

தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் ராகு கோவிலில், உண்டியல் எரிந்து, காணிக்கை பணம் சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரத்தில், நவக்கிரகங்களில் ஒன்றான, ராகு தலம் அமைந்துள்ளது. இக்கோவிலில், ராகு காலத்தில், ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஜூலை, 27ல், ராகு பெயர்ச்சி நடந்தது. அன்று முதல், பரிகாரம் செய்யும் ராசிக்காரர்கள், தினமும் ராகு கால நேரத்தில், பரிகார பூஜை செய்து, வழிபட்டு வருகின்றனர். கோவிலின் வெளி பிரகாரத்தில், கொடி மரம் அருகே, 6 அடி உயரத்தில், எவர்சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை, ராகு காலம் என்பதால், கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, மழையும் பெய்ததால், தண்ணீரில் நனையாமல் இருக்க, உண்டியலை தூக்கி, கோவில் ஊழியர்கள் ஒதுக்குப்புறமாக வைத்தனர். மாலை, 6:00 மணியளவில், உண்டியலில் இருந்து, புகை வெளியேறியது. உடனடியாக, கோவில் ஊழியர்கள், உண்டியலில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின், உண்டியலை திறந்து, காணிக்கையை எண்ணினர். அதில், 1,450 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்திருந்தன. மீதமிருந்த, 45 ஆயிரம் ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. உண்டியலில் யாராவது ஊதுபத்தியை சொருகி வைத்திருக்கலாம்; அவை எரிந்து உண்டியலுக்குள் விழுந்ததால், ரூபாய் எரிந்திருக்கலாம் என, கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
 தொண்டாமுத்துார்: கோவை மாவட்டம், மோளப்பாளையத்தில் உள்ள மூலக்காடு பகுதியில், தஞ்சாவூர் தமிழ் பல்கலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar