குஜிலியம்பாறை:ஆர்.வெள்ளோடு ஆதிபராசக்தி கோயிலில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூமியம்மன் கோயிலில் இருந்து கஞ்சிக்கலயம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஆடி பருவத்தில் இருந்து அதிக மழை பெய்து, குடிநீர் பஞ்சம் தீர்ந்து, விவசாய தொழில் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலில் நடத்தப்பட்ட இந்த கஞ்சிகலயம் எடுத்தல் நிகழ்ச்சியில் நுாற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர். பிறகு கோயிலில் சாமி கும்பிட்டு அனைவருக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. ஆதி பராசக்தி மன்ற தலைவர் பொம்மாநாயக்கர், செயலாளர் சிதம்பரம், பொருளாளர் லட்சுமி, நிர்வாகி நாச்சிமுத்து உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.