பதிவு செய்த நாள்
08
ஆக
2017
02:08
தர்மபுரி: தர்மபுரி விருபாட்சிபுரம், உடுப்பி புத்திகேமட கிளையில், ராகவேந்திர சுவாமியின், 346வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா, கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று சத்யநாராயண சுவாமி பூஜை நடந்தது. இன்று, ராகவேந்திர சுவாமிக்கு பூர்வ ஆராதனையும், நாளை, மத்ய ஆராதனையும், 10ல், உத்ர ஆராதனையும், 11ல் கணபதி ஹோமம், சுக்ஞானேந்திர தீர்த்த ஆராதனை நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டி தலைவர் வெங்கடேசன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் முரளிதரன் மற்றும் உடுப்பி புத்திகே மடத்தின் நிர்வாகி குஞ்சார் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.