புவனகிரி: புவனகிரி ராகவேந்திரா கோவிலில் நடந்த ஆராதனை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி ராகவேந்திரா கோவிலில் ஆராதனை விழா நடந்தது. அதையொட்டி ராகவேந்திரருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை, தீபாராதனை நடந்தது. மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பக்தி பாடல்கள் இன்னிசை கச்சேரி நடந்தது. பூஜைகளை அர்ச்சகர்கள் நரசிம்ம ஆச்சாரியார், ரகு ஆச்சாரியார் செய்தனர். விழாவில், புவனகிரியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ராகவேந்திரா சுவாமிகளின் புனித தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் ராமநாதன், பேராசிரியர் உதயசூரியன், கதிர்வேலு ஆகியோர் செய்திருந்தனர்.