பதிவு செய்த நாள்
14
ஆக
2017
01:08
காஞ்சிபுரம்: ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. காஞ்சிபுரத்தில் பிரசித்திப்பெற்ற காமாட்சியம்மன் கோவில், அம்மனின், 51 சக்தி பீடங்களில், இது காமகோடி பீடமாகும்.இக்கோவிலில் வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, உற்சவ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.ஆடி மாதம் துவங்கியதில் இருந்தே, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது.ஆடி மாதத்தின், கடைசி வெள்ளியான கடந்த, 11ம் தேதி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதே போல, ஆடி கடைசி ஞாயிறான நேற்றும், வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.