பதிவு செய்த நாள்
14
ஆக
2017
01:08
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மதில் சுவரின் மேற்பகுதி, பாரம்பரிய முறைப்படி சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரத்தில், உள்ள வைணவ கோவில்களில் முக்கியமானதாகவும், புராண சரித்திரப் பெருமைகளை கொண்டது, வரதராஜப்பெருமாள் கோவில்.விஜய நகர பேரரசின் ஆட்சி காலத்தில், இக்கோவிலில் பல கட்டடங்கள் கட்டப்பட்டன. அவற்றில் முக்கியமானது, 100 கால் மண்டபம்.இக்கோவில் கிழக்கு, மேற்கு, வடக்குப்புற மதில் சுவரின் மேற்பகுதியில், சுண்ணாம்பு கலவை மூலம் (கோப்பிங்) பாரம்பரிய முறைப்படி சீரமைக்கப்படுகிறது.மதில் சுவரின், 3,882 மீட்டர் நீளத்திற்கு, 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பணி நடந்து வருகிறது என, கோவில் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.