ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் அன்னதான உண்டியல், அமாவாசை உண்டியல் எண்ணப்பட்டது.இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. இதன்படி அமாவாசை உண்டியல் எண்ணப்பட்டதில் 48 ஆயிரத்து 494 ரூபாயும், அன்னதான உண்டியலில் 62 ஆயிரத்து 197 ரூபாயும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 691 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.உண்டியல் எண்ணிக்கையை மாசாணியம்மன்கோவில் உதவி ஆணையர் ரமேஷ், பொள்ளாச்சி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழ்வாணன், கோவில் கண்காணிப்பாளர் செந்தமிழ்செல்வன், கோவில் பணியாளர்கள், நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இன்று பொது உண்டியலும் எண்ணப்பட உள்ளது.