அன்னூர்:அச்சம்பாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 5ம் தேதி நடக்கிறது.அச்சம்பாளையத்தில் உள்ள பழமையான செல்வ விநாயகர் கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா டிசம்பர் 4ம் தேதி மாலை விநாயகர் வழிபாடுடன் துவங்குகிறது. இரவு காப்பு கட்டுதல், கோபுர கலசம் வைத்தல், முதல்கால யாக பூஜை மற்றும் நடன நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. டிச., 5ம் தேதி அதிகாலையில், இரண்டாம் கால யாக பூஜையும், திருமுறை பாராயணமும் நடக்கிறது. விமான கோபுரம், மூலஸ்தான விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காலை 9.00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் அபிஷேக பூஜை. அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கிறது. யாகசாலை பூஜையை குருமூர்த்தி சிவம் செய்து வைக்கிறார். ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.