திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த முத்தையாசுவாமி கோவிலில் இயற்கை சீற்றங்களை தணிக்க கந்தயாகம் சங்கு அபிஷேக லட்சார்சனை நடந்தது. திட்டக்குடி அடுத்த பெருமுளை முத்தையா சுவாமி கோவிலில் இயற்கை சீற்றங்களை தணிக்கவும், நாடு நலம் பெற வேண்டியும் லட்சார்சனை நடந்தது. அதனையொட்டி நடந்த யாகத்தை திருஞான சம்பந்தம், கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான வேதவிற்பன்னர்கள் குழு நடத்தினர். சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள பூமாலையப்பர், ராயப்பர், சித்தநாதர், பச்சையம்மன் தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. பெருமுளை, புலிவலம், சிறுமுளை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.