முள்ளாட்சி மாரியம்மன் கோவில் லட்சார்ச்சனை விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2011 12:11
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் வேண்டுவோருக்கு வேண்டும் அருளை வாரி வழங்கும் முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில் 16ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது. "வில்வாரண்யம் ஷேத்திரம் என்றழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றின் வடகரையில் எழுந்தருளி, அருள்பாலித்து வரும் முள்ளாட்சி மாரியம்மன் கோவிலில், கார்த்திகை 2வது ஞாயிற்றுக்கிழமைகளில், ஆண்டுதோறும் லட்சார்ச்சனை விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். நேற்று 16வது ஆண்டு லட்சார்ச்சனை விழா துவங்கியது. காலை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு தீபராதனையும் நடந்தது. லட்சார்ச்சனை துவங்கி, முடிவடைந்தபின், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருள் பெற்றனர். சேவர்த்திகள் சார்பில் நடந்த விழாவின் ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் நீதிமணி, சிவாச்சாரியர்கள் குமார், சோமாஸ்கந்தன் மற்றும் பக்தர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.