விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார், போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். அரிமா சங்க தலைவர் வெங்கடேசன், வட்டார தலைவர் சுப்ரமணியன், மாவட்ட தலைவர் உலகநாதன், பொருளாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பாலச்சந்தர் வரவேற்றார். விழாவில், மாணவர்களுக்கு மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசளிக்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, ஏராளமான மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.