ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை பெண் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, நிஷிபா முகர்ஜி ராமேஸ்வரம் வந்தனர். சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் இரு தலைமை நீதிபதிகள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நீதிபதிகளுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின் காரில் தனுஷ்கோடி அரிச்சல்முனை சென்ற தலைமை நீதிபதிகள், அங்குள்ள கடல் நீரை தெளித்து புனித நீராடி விட்டு, கடற்கரை அழகை கண்டு ரசித்தனர். பின் அங்கிருந்து காரில் மதுரை புறப்பட்டு சென்றனர். முன்னதாக நீதிபதிகளை ராமநாதபுரம் மாவட்ட நீதிபதிகள், கலெக்டர் நடராஜன், கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி வரவேறனர்.