மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் அருள்பாலிக்கின்றனர்.
அசுர குரு சுக்கிராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் பற்றி அறிந்திருந்தார். அதை அறிய விரும்பிய தேவர்கள், தேவகுருவின் மகன் கசன் என்பவனை அனுப்பி வைத்தனர். சுக்கிராச்சாரியாரிடம் சென்ற கசன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு கொண்டவன் போல நடித்தான். அவள் மூலமாக சுக்கிராச்சாரியாரின் அன்பை பெற்ற கசன், மந்திரத்தைக் கற்றான். இதை அறிந்த அசுரர்கள், கசனை எரித்து சாம்பலாக்கினர். கசனை காணாத தேவயானி, தந்தையின் உதவியுடன் உயிர்பெற செய்தார். இந்த சமயத்தில் தேவகுரு, தன் மகன் கசனை காத்தருளும்படி பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அவர் சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்குள்ள கோயிலில் எழுந்தருளினார்.