பதிவு செய்த நாள்
26
ஆக
2017
11:08
நாகர்கோவில், ஆவணி அஸ்தம் நட்சத்திரமான ஆக.25ம் தேதி ஓண கொண்டாட்டம் தொடங்கியது. இனி 10 நாட்கள் மலர்களால் அமைக்கப்படும் கோலங்கள் மக்களை வரவேற்கும்.
விஷ்ணு பகவானின் 10 அவதாரத்தில் வாமன அவதாரத்தை விளக்குவதுதான் திருவோண பண்டிகையின் வரலாறு. திருக்காக்கரை பகுதியை வாய்மை தவறாமல் ஆண்டு வந்த மகாபலி சக்கரவர்த்தியிடம், மூன்று அடி நிலம் கேட்ட போது தருகிறேன் என்று சொன்ன சொல்லை காப்பாற்ற மூன்றாவது அடிக்கு தனது தலைை-யை கொடுத்து மண்ணுக்குள் அந்த மன்னர் மாய்ந்து போனார். அவ்வாறு மாய்ந்த மன்னர் விஷ்ணுபகவானிடம் கேட்டு பெற்ற வரத்தின் படி ஆவணி மாதம் ஓணம் நாளில் மக்களை காண வருவதாக ஐதீகம்.
செப்., 4-ம் தேதி திருவோண பண்டிகை . அதற்கு முன்னோடியாக அஸ்தம் நட்சத்திர தினமான ஆக.25ம் தேதி காலையில் ஓண கொண்டாட்டம் தொடங்கியது. வீடுகளின் முன் மலர்களால் அமைக்கப்பட்ட கண்கவர் கோலங்கள் அணி வகுத்தது. கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையில் நேற்று காலை அத்தப்பூகோலம் போடப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் இதனை கண்டு ரசித்தனர். ஓண கொண்டாட்டம் 2வது நாளில் கோலம் மெருகூட்டல் தொடர்ந்து ஒவ்வொறு நாள்களிலும்,ஓணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குதல், அறுசுவை விருந்துக்கான ஆயத்தம்,படகு போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்துதல், கலாசார விழாக்கள் நடத்துதல், அத்தப்பூ கோலத்தை மேலும் மெருகூட்டுதல், அத்தப்பூ கோலத்தில் களிமண் மேடு அமைத்து அலங்கரித்தல், திருவோணத்தை வரவேற்கும் முன்னேற்பாடுகள், கடைசி நாளான பத்தாம் நாளன்று திருவோணத்தை அறுசுவை உணவுடன், புத்தாடை அணிந்து கொண்டாடுதல். இப்படி 10 நாட்கள் கேரளா மட்டுமல்ல, அதனை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஓண கொண்டாட்டம் களை கட்டும். ஓணத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய பூ மார்க்கெட்டான தோவாளையில் பூக்களின் விலை உயர்ந்தது.