Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

நின்ற நாராயணப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நின்ற நாராயணப் பெருமாள் கோயில் ... பாண்டூர் பாண்டவ சகாய பெருமாள் கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷனம் பாண்டூர் பாண்டவ சகாய பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பேட்டரி கார் வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2017
11:34

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியில் செல்ல கூடுதல் பேட்டரி கார் வசதி இன்றி பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் 20 ஆயிரம் வட, தென் மாநில பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோயில் மற்றும் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மாநில அரசுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து 2013ல் கோயில் நான்கு ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை  விதித்தனர்.

இதனால் ரதவீதி, சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயிலுக்கு செல்ல முடியாமல் வயதான பக்தர்கள், பெண்கள் சிரமம் அடைந்தனர். இதன் பின், ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் 5 பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு, அதனை பராமரிக்காமல் பழுதாகி பயன்பாடின்றி போனது. பின் கடந்தாண்டில் ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் சார்பில் 3 பேட்டரி கார்கள் இயக்கப்படுகிறது.  இக்காரில் ஒரு பக்தருக்கு ரூபாய் 5 கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் பக்தர்கள் கூட்ட நெரிசலுக்கு 3 பேட்டரி கார்கள் போதுமானதாக இல்லாததால், 400 முதல் 600 மீட்டர் துாரம் வரை பக்தர்கள் நடந்து கார் பார்க், வாடகை ஆட்டோ ஸ்டாண்ட் தேடி செல்லும் அவலம் உள்ளது. இதனால் பெண்கள், வயதான பக்தர்கள், குழந்தைகள் நடக்க முடியாமல் அவதிபடுகின்றனர்.  எனவே  பக்தர்கள் நலன் கருதி கூடுதல் பேட்டரி கார்கள் இயக்க கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும் என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
பழநி: உலகநலன் வேண்டி, பழநி பெரியநாயகியம்மன் கோயில் அன்னாபிஷேகம் நடந்தது.பழநி மலைக்கோயிலில் ஜூன் 16ல் ... மேலும்
 
temple
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் நடந்த வனதோப்பு உற்சவத்தில் ... மேலும்
 
temple
விக்கிரவாண்டி: எண்ணாயிரம் முற்றிலா முலையம்மன் உடனுறை திருக்கடம்பலிங்கேஸ்வரர் கோவில் திருப்பணி ... மேலும்
 
temple
காஞ்சிபுரம் : காஞ்சி அத்தி வரதருக்கு நெய்வேத்தியம், அபிஷேகம் உள்ளிட்டவை இல்லாத நிலையில், 24 மணி நேரமும், ... மேலும்
 
temple
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் நந்தவனத்தில் இருந்த, 100 மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.