வேண்டியவர்களோ, வேண்டாதவர்களோ... ஒருவருக்கு துன்பம் வந்துவிட்டால் போதும். உள்ளத்தில் சந்தோஷம் பொங்குகிறது. ஆஹா... நேற்று வரை என்ன ஆட்டம் போட்டான்! இப்போது சிக்கிக் கொண்டானா? போன வருஷம் என்னை அடிக்க கையை ஓங்கினானே! இந்த வருஷம் ஆக்சிடென்டில் கையையே இழந்து விட்டான். இப்போது தான் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, கடவுள் தக்க தண்டனை கொடுத்து விட்டார், என்று மகிழ்ச்சியடையவே கூடாது. நமக்கு இடைஞ்சல் செய்பவர்களுக்கு தண்டனை தரும் உரிமை இறைவனுக்கு உண்டு. ஆனால் அதற்காக நாம் சந்தோஷப்படும் உரிமையை நமக்கு அவன் தரவில்லை. ஏனெனில் தவறு செய்தவனே அதை உணரும் காலம் வரும். இதுகுறித்து நபிகள், உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. அல்லாஹ் அவன் மீது கருணை புரிந்து அந்த துன்பத்தை களைந்து விடுவான். உன்னை துன்பத்தில் ஆழ்த்தி விடுவான், என்கிறார். இங்கே சகோதரன் என்பது சக மனிதர்கள் அனைவரையும் குறிக்கும்.