பதிவு செய்த நாள்
31
ஆக
2017
01:08
நகரி : புதுப்பேட்டையில் கங்கையம்மன் ஜாத்திரை விழா, நேற்று, வெகு விமரிசையாக நடந்தது. சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, புதுப்பேட்டையில், கடந்த 27ம் தேதி ஜாத்திரை விழா துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில், கரக ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். அதிகாலை, 4:00 மணிக்கு, கங்கையம்மன் புதுப்பேட்டை கிராமத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கிராம பெண்கள் கும்பம் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலையில், கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் பூகரகத்துடன் உற்சவர் சிவகங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு இன்னிசை கச்சேரி மற்றும் நாடகம் நடந்தது.