பதிவு செய்த நாள்
31
ஆக
2017
01:08
ஆர்.கே.பேட்டை : ரமணானந்த சுவாமியின், 22ம் ஆண்டு, குரு பூஜை, வரும் சனிக்கிழமை பொதட்டூர்பேட்டையில் நடக்கிறது. அவரது சீடர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். பொதட்டூர்பேட்டை, அகத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில், வரும் சனிக்கிழமை, ரமணானந்த சுவாமியின், 22ம் ஆண்டு, குரு பூஜை நடக்கிறது. முன்னதாக வெள்ளிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு, தேவாரம், திருப்புகழ் இன்னிசையுடன், விழா துவங்குகிறது.அதை தொடர்ந்து, அன்று இரவு, சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது. மறுநாள், காலை, 6:00 மணிக்கு, வேள்வி, சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. காலை 9:00 மணிக்கு தேவாரம், திருப்புகழ் இன்னிசை மற்றும் பக்தி சொற்பொழிவுநடத்தப்படும்.