பதிவு செய்த நாள்
01
செப்
2017
11:09
சேலம்: சேலம், செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 51 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட தேர், நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. சேலம், அம்மாபேட்டையில் செங்குந்தர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, புதிதாக, 40 லட்சம் ரூபாய் செலவில் திருத்தேர் வடிவமைக்கப்பட்டது. அதேபோல், குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புதிதாக, 11 லட்சம் ரூபாய் செலவில் ஆதார மரத்தேர் வடிவமைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், மங்கள இசை, கணபதி பூஜை, திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, 108 மூலிகை திரவிய ?ஹாமம் ஆகியவை நடந்தது. பின்னர், 5:15 மணிக்கு இரண்டு திருத்தேருக்கும் கும்பாபி?ஷகம் செய்யப்பட்டது. 10:30 மணிக்கு திருத்தேர் வெள்ளோட்ட புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இரு தேர்களும் கோவிலில் தொடங்கி, மாட வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இணைந்து, தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை, 6:15 மணிக்கு திருவிளக்கு கூட்டு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.