பதிவு செய்த நாள்
01
செப்
2017
11:09
காஞ்சிபுரம்: திருக்காலிமேடு, மாத்தம்மன் கோவிலில், தீமிதி விழா நடந்தது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு, அருந்ததியர் நகரில், மாத்தம்மன் கோவில் உள்ளது. இதன், 10ம் ஆண்டு ஆடித்திருவிழா, 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு தினமும் காலை, சிறப்பு அபிஷேகம் நடந்து வந்தது.ஏழாம் நாளான, நேற்று முன்தினம் காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பகல், 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, தீமிதி விழாவும், தொடர்ந்து, மலர் அலங்காரத்தில், அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.