பதிவு செய்த நாள்
01
செப்
2017
12:09
சங்ககிரி: கல்வடங்கம் காவிரி ஆற்றில், கடந்த ஆறு நாட்களில், 2,600 சிலைகளும், கடைசி நாளான நேற்று, 17 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சேலம், நாமக்கல் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கடந்த, 25ல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வழிபாடு செய்த சிலைகளை லாரி, டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு சென்று, தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில், கடந்த ஆறு நாட்களாக, 2,600 சிலைகள் கரைக்கப்பட்டன. சிலைகள் கரைக்கும் கடைசி நாளான நேற்று, தேவூர், இடைப்பாடி, வெள்ளாண்டிவலசு ஆகிய பகுதிகளில் இருந்து, 17 விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று, பக்தர்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் வைத்து, சிறப்பு வழிபாடு செய்து, ஆற்றில் கரைத்து சென்றனர்.
* தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டியில் விநாயகர் சதுர்த்தியொட்டி, இந்து முன்னணி சார்பில், எட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று, மதியம் பெருமாள் கோவில் வளாகத்தில் இருந்து, ஊர்வலமாக புறப்பட்டு மாலை, 5:00 மணியளவில் செந்தாரப்பட்டி ஏரியில் விசர்ஜனம் செய்தனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.