பதிவு செய்த நாள்
01
செப்
2017
12:09
வடமதுரை, வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவிற்காக புங்கம்பாடி கிராம பக்தர்கள் 15வது ஆண்டாக பாதயாத்திரை செல்கின்றனர். ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழா செப்.,8 வரை நடக்க உள்ளது. திண்டுக்கல், தேனி மாவட்ட பக்தர்கள் சிறு, சிறு குழுக்களாக வேளாங்கன்னிக்கு வடமதுரை வழியே பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர். பலர் கொடி, சிலுவையை ஏந்தியும், சப்பரம், தேர், சைக்கிள் ரிக் ஷா போன்றவற்றில் மாதா சிலையுடன் பக்தி பாடல்களை ஒலிபரப்பியவாறு செல்கின்றனர். சாணார்பட்டி கொசவபட்டியை சேர்ந்த புங்கம்பாடி கிராமத்தினர் நேற்று முன்தினம் பாதயாத்திரை துவங்கி காணப்பாடி, சித்துார் வழியே வடமதுரை வந்தனர். இக்குழுவை சேர்ந்த செபஸ்தியான் கூறுகையில், “15 ஆண்டுகளாக மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியே செப்.2ம் தேதி வேளாங்கண்ணி செல்கிறோம், என்றார்.