ஸ்ரீபெரும்புதுார்:துாய அன்னை வேளாங்கண்ணி ஆலய ஆசீர்வாதப் பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீபெரும்புதுாரில் துாய அன்னை வேளாங்கண்ணி ஆலயம் அமைந்து உள்ளது. இதன், 9ம் ஆண்டு ஆசீர்வாதப் பெருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், வரும் 6ல் நற்கருணை பவனியும், 7ம் தேதி திருத்தேர் திருவிழாவும், 8ம் தேதி அன்னையின் பிறப்பு விழாவும் விமரிசையாக நடைபெற உள்ளது. கொடியேற்ற விழாவில், அருட்தந்தை மரிய அருள்ராசா தலைமை தாங்கினார். ’மரியின் வழியில் மனிதம் மலர்ந்திட’ என்ற தலைப்பில் சிந்தனை சொற்பொழிவு நடந்தது. பங்கு தந்தை லாரன்ஸ் ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.