நாகர்கோவில், கன்னியாகுமரியில் ஒரு பகுதி முஸ்லீம் மக்கள் நேற்று பக்ரீத் கொண்டாடினர். நாகர்கோவில் இடலாக்குடியில் நடைபெற்ற தொழுகையில் திரளான மக்கள் கலந்து கொண்டனர். தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை தமிழ்நாட்டில் இன்று கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறையும் இன்றுதான் அறிவிக்கப்பட்டு்ள்ளது. ஆனால் வளைகுடா நாடுகளில் நேற்று பக்ரீத் கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாகுடி மஜருல்லா அசரப் பள்ளிவாசலில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர். இது போல கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிவாசல்களிலும் நேற்று பக்ரீத் கொண்டாடப்பட்டது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையை மேற்கொண்டனர். அண்டை மாநிலமான கேரளாவிலும் நேற்று பக்ரீத் கொண்டாடப்பட்டது. எனினும் பெரும்பாலான பள்ளி வாசல்களில் இன்று காலை பக்ரீத் தொழுகை நடைபெறுகிறது.