நாகர்கோவில், அகில பாரத இந்து மகா சபா சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 3008 சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. நேற்று இந்த சிலைகள் கடல் மற்றும் ஆறுகளில் கரைக்கப்பட்டது. நாகர்கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது. கோட்டார், பீச்ரோடு சந்திப்பு வழியாக சொத்தவிளை கடல் பகுதியில் சிலைகள் கரைக்கப்பட்டது. ஊர்வலத்துக்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.