பதிவு செய்த நாள்
04
செப்
2017
01:09
உளுந்துார்பேட்டை: ஆதனுார்பாச்சாப்பாளையம் கிராமத்தில் ஸ்ரீஅழகிரி வெங்கடேச பெருமாள் மற்றும் ஸ்ரீ சாந்த் ஆஞ்சநேயர் சுவாமிகள் கோவில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி, 2ம் தேதி காலை 8.30 மணிக்கு சுதர்சன வாஸ்து ேஹாமங்களும், மாலை 5 மணிக்கு அங்குரார்பணம், அக்னி பிரதிஷ்டையும், பரிவார கும்பார்சனம் நடந்தன. நேற்று காலை 8.30 மணிக்கு புண்யாஹவாசனம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூர்ணாஹதி சாற்றுமறையும், மாலை 4.00 மணிக்கு மகா சாந்தி திருமஞ்சனம் நடந்தது. இன்று (4 ம் தேதி) காலை 7 மணிக்கு புண்யாஹம், கோ பூஜை, விஸ்வரூபம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், மஹா பூர்ணாஹிதி, கும்ப புறப்பாடும், காலை 9.00 மணிக்கு விமான மூலவர் பரிவாரங்கள் சம்ப்ரோஷணை, வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை, தீர்த்த பிரசாத விநியோகங்கள் நடக்கிறது. கும்பாபிஷேக பணிகளில் திருக்கோவிலுார் ஜீயர் சீனிவாசராமாநுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் திருச்சித்ர கூடம் ரங்காச்சாரியார் சுவாமிகள் மற்றும் சதுர்வேதி சுவாமிகள் ஆசியுடன் நடக்கிறது.