பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர் பிடாரி மாரியம்மன், பெரிய மாரியம்மன், புதுமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 8:45 மணிக்கு கலச புறப்பாடு, 9:00 மணிக்கு மேல், மூன்று கோவில் கோபுர கலசங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.