திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாள் தெப்ப உற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2025 12:12
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அய்யங்குளத்தில் நடந்த முதல் நாள் தெப்ப உச்சவத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம், 24ம் தேதி, கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமும் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இன்று 5ம் தேதி அதிகாலை வரையில் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் தெப்ப உற்சவம் நேற்று துவங்கியது. அய்யங்குளத்தில் நடந்த முதல் நாள் தெப்ப உச்சவத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. 7ம்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றது.