பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2025 11:12
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு, கொடும்பு அருகே, திருவாலத்தூர் இரண்டு மூர்த்தி பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, திருகார்த்திகை உற்சவம் ஆண்டுதோறும் கோலாகல மாக கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு உற்சவத்தின் கொடியேற்றம், நவ., 26ம் தேதி அண்டலாடி பர மேஸ்வரன் நம்பூதிரிப்பாட் தலைமையில் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக வழிபாடுநடந்தது. மாலை, 6:15 மணிக்கு, 10 ஆயிரத்திற்கும்மேற்பட்ட சுற்று விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதன்பின், பகவதி அம்மன் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, (5ம் தேதி) உச்ச பூஜை, ஸ்ரீபூதபலி, தீபாராதனை, தேசவிளக்கு, நிறமாலை ஆகிய நிகழ்வுகள் நடக்கிறது. மகிஷாசுரமர்த்தினி மற்றும் அன்னபூர்ணேஸ்வரி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இக்கோவில், கேரளாவில் உள்ள 108 துர்க்கை அம்மன் திருத்தலங்களில் மிக முக்கியமான ஆலயம்.