பதிவு செய்த நாள்
06
செப்
2017
01:09
காஞ்சிபுரம்:பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தில், காமாட்சி அம்மன் கோவில் மாட வீதிகளில் வசதியை மேம்படுத்த, 2.46 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் கோவில், காமாட்சி அம்மன் கோவில்கள் கொண்டு வரப்பட்டன. இந்த கோவில்களில் வசதிகளை மேம்படுத்தி, சுற்றுலா பயணியரை கவரும் விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, முதற்கட்டமாக மழைநீர், குடிநீர், மின்சாரம், டெலிபோன் ஆகியவற்றின் கேபிள்கள், நிலத்திற்கு அடியில் செல்லும் வகையில், கால்வாய் அமைக்கும் பணிகள் ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் ஆகிய கோவில் மாடவீதிகளில் நடக்கின்றன. தற்போது, காமாட்சி அம்மன் கோவிலிலும் இப்பணி துவக்க, 2.46 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.