பதிவு செய்த நாள்
11
செப்
2017
12:09
செஞ்சி: ஆனத்துார் பாலமுருகன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி தாலுகா ஆனத்துார் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதையொட்டி, கடந்த 9ம் தேதி காலை 10.30 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்த்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், கலச பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு கோ பூஜை, தன பூஜை, விக்னேஸ்வர பூஜை, தம்பதி பூஜை, மூல மந்திர ஹோமங்கள் நடந்தது. காலை 8.15 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் நடந்தது. 8.50 மணிக்கு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தில், மாவட்ட நீதிபதி சரோஜினி தேவி, தலைமை குற்றவியல் நீதிபதி சுபா அன்புமணி, தமிழ்நாடு- புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் கதிரவன், விழுப்புரம் வழக்கறிஞர் வேலவன், கோவில் நிறுவனர் ஞானசுந்தரி கன்னியப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக பூஜைகளை சுரேஷ்சர்மா அய்யர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.