ராமேஸ்வரம்: பாம்பன் அன்னை ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழா செப்.,8 ல் நடந்தது. விழாவில் திருச்சி புனித ஜோசப் கல்லுாரி தாளாளர், பாதிரியார் ஜோஅருண் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரி்ல் ஆரோக்கிய மாதா எழுந்தருளியதும், தேர்பவனி வீதி உலா வந்தது. விழாவில் பாம்பன் மாதா சர்ச் பாதிரியார் பிரிட்டோ ஜெயபாலன், உதவி பாதிரியார் ஜெரோன், செயலாளர் அந்தோணிசகாயம் பலர் பங்கேற்றனர்.