புரட்டாசி சனியை சனிப்பெருக்கு என்று சொல்வர். இந்நாளில் பஞ்ச லட்சுமி திரவியம் தானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். லட்சுமிக்கு விருப்பமான பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவற்றை பஞ்சலட்சுமி திரவியம் என சொல்வர். இவற்றை புரட்டாசி சனியன்று தானம் அளித்தால் லட்சுமி மனம் குளிர்ந்து அருள் புரிவாள்.